நிழல் தரும் வசந்தம் - 15

  • 1.2k
  • 573

தீபாவும்,ரஞ்சனியும் எப்பவும் போல காலேஜ் போய் வந்தாலும் பிரேமை நினைக்காமல் இல்லை. அப்போதுதான் கிருஷ்ணாவின் நட்பு அவர்களுக்கு ஆறுதல் ஆக இருந்தது. கிருஷ்ணா நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர்களுடன் பேசிக்கொண்டிருப்பான். இவர்கள் அதற்காக அவனுக்கு நன்றி சொன்னார்கள்.பிரேம் போய் சேர்ந்த உடன் ஃபோன் பண்ணினான். தீபா எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாருங்கள் என்றாள். அம்மாவை வேண்டுமானால் வர சொல்லட்டுமா என்றான். அதெல்லாம் வேண்டாம் அவர்கள் இங்கே நாங்கள் காலேஜ் போன பின் தனியாகத்தான் இருக்க வேண்டும் என்றாள். அதுவும் சரிதான் என்றான். கிருஷ்ணாதான் அவ்வப்போது வந்து பேசிவிட்டு போவதாக சொன்னாள்.சரி கவனமாக இருந்து கொள் லவ் யு தீபா என்றான். லவ் யு பிரேம் பை என்று ஃபோன் வைத்தாள் . அன்று சுபா வந்திருந்தாள். என்ன சுபா எங்க கல்யாணத்தப்ப பார்த்தது அப்புறம் பார்க்கவே முடியவில்லை என்றாள் தீபா. அப்படியில்லை நீங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள்