கல்யாணம் அதிகாலை வேளை என்பதால் இரவு நேரத்தோடு தூங்கிவிட்டாள் தீபா. ரஞ்சனியும் பிரேமும் விழித்து கொண்டு இருந்தனர். என்ன மாமா தூக்கம் வரலியா நாளைக்கு ஃபர்ஸ்ட் நைட் ல தூங்கிட போறீங்க என்றாள். என்ன ரஞ்சனி எப்படி தூக்கம் வரும் . எப்படியோ ஆரம்பிச்சு இப்போ கல்யாணம் . எனக்கு சந்தோஷமாகவும் அதே சமயம் குற்ற உணர்வாகவும் உள்ளது. அதெல்லாம் முடிஞ்ச கதை மாமா. அக்காவை சந்தோஷமா வெச்சுக்கோங்க அது போதும் என்றாள். நீ சொல்லுறதும் சரிதான். சுபாவும் வந்துவிட்டாள் . நீ இன்னும் பழசை நினைத்து கொண்டிருக்காதே பிரேம் என்றாள். போய் நேரத்தோடு தூங்கு . சரி சுபா. பனி அவன் மனதிலும் வெளியிலும் படர்ந்திருந்தது. சுபாவும்,ரஞ்சனியும் கல்யாண போட்டோஷூட் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவன் அம்மாவை தேடி போனான் பிரேம். அவள் ஏதோ அடுக்கி வைத்து கொண்டிருந்தாள். இவனை பார்த்ததும் பிரேம் என்ன வேணும் இந்நேரத்துக்கு ?பால் சுட வைத்து