நிழல் தரும் வசந்தம் - 12

  • 657
  • 240

தீபாவுக்கு இந்த பயணம் மகிழ்ச்சியை தந்தது. அவள் மனதில் இருந்த சலனங்கள் எல்லாம் போய்விட்டது. இப்போது பிரேம் அவனுடனான கல்யாணம் இதைப்பற்றி மட்டுமே அவள் மனம் சிந்தித்து கொண்டிருந்தது. என்ன தீபா உனக்கு நீயே சிரித்து கொள்கிறாய் என்ன விஷயம் என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை உன்னுடைய சின்ன வயசு போட்டோ நினைவுக்கு வந்துவிட்டது அதை நினைத்துதான் சிரித்தேன். ஓ அது எப்போதோ எடுத்தது. பரவாயில்லை நீ சிறுவயதில் அழகாய்த்தான் இருக்கிறாய் என்றாள். தாங்க்ஸ் தீபா. ம் மாமாவுக்கு குறும்பு என்றாள் ரஞ்சனி.வீடு வந்து சேர்ந்ததும் பிரேம் அம்மாவுக்கு பத்திரமாக வந்து சேர்ந்து விட்டதாக ஃபோன் பண்ணி சொன்னார்கள் . இதெல்லாம் இப்போது யார் ஃபாலோ பண்ணுகிறார்கள் என்றாள் ரஞ்சனி.எல்லாம் பிரேம் மன திருப்திக்குத்தான் . ரஞ்சனி தேர்வு முடிவுகள் வந்துவிட்டது. அவள் நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகியிருந்தாள் . தீபா அவளை தூக்கி சுற்றினாள். போதும் அக்கா நான் ஏதோ