குமரகுருவிடம் ஏன் பேசவில்லை என தீபாவிடம் கேட்க முடியாது. அவள் பிடிவாதக்காரி. ரஞ்சனி சொன்னால் அவள் கேட்பாள் ஆனால் இப்போது வேண்டாம் அவள் நல்ல மூடில் இருக்கிறாள் அதை கெடுக்க வேண்டாம் என எண்ணினான். அவளை எங்காவது தூரத்து குளிர் நாட்டுக்கு அழைத்து போக வேண்டும். அவள் சந்தோஷப்படுவதை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இந்த சின்ன வயதில் அவளுக்கு காதல் வந்தது அவ்வளவு பெரிய குற்றமல்ல. தீபா ஃபோன் செய்திருந்தாள். எங்கே போயிருந்தாய் பிரேம்.மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தேன் . ம் போகட்டும் எனக்கு பிடித்த டெசர்ட்களை செய்திருக்கிறார்கள் வா போகலாம் சாப்பிட என்றாள். இரவு உணவு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்தது.நீ இன்றைக்கும் கார் ஓட்ட வேண்டாம். ரஞ்சனி டிரைவர் ஓட்டுவார் என்றாள்.தீபா இப்போது சாதாரண உடையில் மேக்கப் எல்லாம் கலைத்தவளாக இருந்தாள். இவனுக்கு நெருங்கிய சொந்தமானவளாக மாறிவிட்டாள். அவளுடைய கையிலும் இவனுடைய கையிலும் ஹார்ட்டின் போட்ட மோதிரம் மின்னியது. தீபா