பிரேம் உடனடியாக எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்த வில்லை. அவனுக்கு தீபா உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்ததாக தோன்றியது. தான் எதையும் திட்டமிடவில்லை எனவும் சொல்ல செய்தான். தீபா தன் துணையை இறுகப்பற்றும் முனைப்பில் இருந்தாள். அவளுக்கு இந்த வயதில் துணை அவசியம் . ஏற்கனவே இருந்த துணையை இழந்த ஏமாற்றத்தில் இருந்தாள். இம்முறையும் ஏமாற அவள் தயாரில்லை. அவள் அழகுக்கும், அவளுடைய வாழ்க்கைக்கும் சரியான வழிகாட்டுதல் தேவை என்கிற நிலையை அவள் அடைந்திருந்தாள். நவீனை அவள் ஒதுக்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவளிடத்தில் இல்லை. ஆனால் அவன் அவ்வாறு பேசுகிற போது தன்னைத்தானே நொந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. ரஞ்சனி பதட்டத்துடன் வாசலில் நின்று கொண்டிருந்தாள். என்னாச்சு மாமா நவீன் மறுபடி பிரச்சனை பண்ணுகிறானா? நான் அப்பாவிடம் பேசவா என்றாள். அதெல்லாம் வேண்டாம் . அவன் அவனுடைய வேதனையை பதிவு செய்கிறான்.அதை பெரிதுபடுத்த வேண்டாம் . நாம் நம்முடைய வேலையில் பிஸி