பிரேம் தான் ஒரு கனவுக்குள் இயங்குவதாக நினைத்தான். எதார்த்தமாக ஒரு சம்பவம் கூட நடைபெறவில்லை. காலம் தன்னை அதன் போக்கில் இழுத்து செல்வதாக தோன்றிற்று . அவனுக்கென்று இருந்த பிரத்யேக உரிமைகள் கூட இப்போது அவனுக்கு சொந்தமில்லை. சௌமியாவின் இழப்பு ஈடு செய்ய முடியாததாய் தோன்றிற்று. காட்சிகள் இடைவிடாமல் மாறிக்கொண்டே இருப்பது எது நிஜம் எது மாயை என்று புரியாவிடாமல் அடித்தது. ஒரு நீண்ட காதலின் முடிவு இப்படித்தானா இருக்க வேண்டும் என யோசித்தான். என்ன யோசனை மாமா என்று ரஞ்சனி கேட்டாள். ஒண்ணுமே புரியலைமா அதெல்லாம் அப்படித்தான் எல்லாம் ஒரு குட்டி பிரேம் வந்தா சரியா போகும் என்றாள். ம் நீ ஒருத்திதான் இந்த பூமியில் கால ஊன்றி நிற்கிறாய். சாப்பிட வாங்க என்றாள்.ப்ரேக்ஃபாஸ்ட் இவர்கள் ஊரின் ஸ்டைல் மாதிரி இருந்தது. எல்லாம் அக்காதான் இது நாங்களும் பழகி கொள்ள என்றாள் ரஞ்சனி. இன்னைக்கு ஸ்கூல் போயிட்டு வரணும் என்றாள்