தீபாவுடன் நடக்க இருக்கும் திருமணம் எளிமையாக இருந்தால் போதுமானது என எண்ணினான் பிரேம். குமரகுரு மறுப்பேதும் சொல்லவில்லை. கல்யாணம் கோவிலில் நடைபெற இருந்தது. தீபா எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தாள். அவளுடைய எக்ஸாமுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. பிரேம் அவளை படிப்பில் கவனம் செலுத்தும்படி சொன்னான்.நாட்கள் ஓடின. சௌமியா மறுபடி ஃபோன் செய்து தன்னுடைய கல்யாணத்துக்கு தீபாவையும் அழைத்துக்கொண்டு பிரேம் வர வேண்டும் என்றாள். சுபாதான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வதாயும் சொன்னாள். ரிசப்ஷன் அருகே சுபா நின்றிருந்தாள். சௌமியா அப்பா நீ உண்மையிலேயே பெரிய மனுஷன் தான் என்றார். தீபாவையும், பிரேமையும் வரவேற்றார். முதல்நாள் வரவேற்பு நிகழ்ச்சி மறுநாள் கல்யாணம்.ஏற்காட்டில் வைத்திருந்தார்கள். இவன் தீபாவுடன் சில இடங்களை சுற்றி பார்த்தான். சௌமியா அன்று மாலை வந்து தீபாவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தாள். பிரேம் மறுநாள் விடிகாலை கல்யாணத்துக்கு ரெடி ஆகி விட்டான். தீபா தூங்கிக்கொண்டிருந்தாள் . சிறு பெண் தானே என்ற