நிழல் தரும் வசந்தம் - 5

  • 1.8k
  • 760

நவீனை பார்த்து பேச விரும்பும் பிரேம் அவன் இருக்கும் இடத்தை அறிய முயற்சி செய்கிறான். அபிஷேக் பிரேமுக்கு ஃபோன் செய்து எப்படியாவது நவீனை விட்டுவிடும் படியும் இனிமேல் அவன் தீபா வழிக்கே வரமாட்டான் என்றும் கூறுகிறான். குமரகுருவிடம் பேசுமாறு கேட்டுக்கொள்கிறான். இவன் தயங்கியவாறே குமரகுருவிற்கு ஃபோன் செய்தான். அவர்கள் சுபாவை கடத்தி மிரட்டியிருக்கிறார்கள் என்னை அவர்களை சும்மா விட சொல்கிறாயா என்றார். அவனை நான் விட்டாலும் போலீஸ் சும்மா விடமாட்டார்கள் அதற்கான ஏற்பாட்டையும் செய்து விட்டேன் என்றார். சிறிது நேரம் பேசாமல் இருந்தவர் அவனை சும்மா விட வேண்டும் என்றால் நீ என் பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாயா அவனை விட்டு விடுகிறேன் என்றார். இவன் மனதில் ஒரு நிமிடம் சௌமியா வந்து போனாள். வேண்டாம் சார் தெரிந்தே அந்த பாவத்தை செய்யாதீர்கள் என்றான். எது பாவம் என பெண் வாழ்க்கைதான் எனக்கு முக்கியம் யோசித்து சொல் நான் தீபாவிடமும் பேசுகிறேன்