நிழல் தரும் வசந்தம் - 3

  • 3.3k
  • 870

வேலைக்கு சேர்ந்து ஒரு மாசம் ஆகி விட்டிருந்தது. இது வரை எந்த பிரச்சனையும் இல்லை.. சுபா கொஞ்சம் பொறுமை இழந்தவளாக காணப்பட்டாள் . ஏன் பிரேம் எனக்கு மட்டும் இப்படி நடக்குது என்றாள். இன்று வக்கீலை பார்த்து பேசிவிட்டு வருவோம் என்றான். காலை 11 மணிக்கு வர சொல்லியிருந்தார். இவனும் பர்மிஷன் போட்டு விட்டு சுபா கூட போனான். இவர்களை வரவேற்ற வக்கீல் பிரேம் குறித்து விசாரித்தார். இது ஒரு சாதாரண கேஸ் உனக்கு ஜீவனாம்சம் கூட வேணாம்னு சொல்லிட்ட அப்புறமும் மதன் ஏன் இப்படி பண்ணுகிறார் என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் பேசி பாருங்களேன் சார் என்று பிரேம் சொன்னான். நிச்சயம் பேசுகிறேன் எனக்கு சுபாவை பார்த்தால் பாவமாக இருக்கிறது. நீங்கள் மனம் தளர வேண்டாம் எப்படியும் 3 மாதத்துக்குள் விவாகரத்து வாங்கி விடலாம் என்றார். இவர்கள் விடை பெற்றுக்கொண்டார்கள். சௌமியாவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. அவளுக்கு ஃபோன்