அந்த நாளை எப்படி துவங்குவது என்பது பிரேமுக்கு தெரியவில்லை. எப்போதும் போல இருந்து விட முடியவில்லை. வேலையில்லா நாட்கள் பெரும் சுமையாய் இருந்தன. படிப்பு முடிந்து 2 வருஷம் ஓடி விட்டது. அவனுடையது நல்ல காலேஜ் தான். இவனும் நன்றாகத்தான் படித்தான். ஆனால் இன்டர்வியூ என்று வரும் போதுதான் நெருக்கடிகள் அதிகம் வருகின்றன. இதற்கிடையில் எல்லோரையும் போல சௌமியா உடன் காதல். அவள் விட்டு விட போவதில்லை. குடும்ப சூழ்நிலை பரவாயில்லை. தம்பி வேலைக்கு போகிறான். அவன் பார்த்து கொள்கிறான். அவன் டிப்ளோமா முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டது. தானும் அளவாய் படித்திருக்க வேண்டும் என எண்ணினான்.ரொம்ப படித்தவர்களால்தான் நாட்டில் தொல்லை.சௌமியா வேலைக்கு போகிறாள். அவள் அப்பா பெரிய காண்ட்ராக்ட் கம்பெனி நடத்துபவர். அவர் நினைத்தால் வேலை கிடைக்கும் ஆனால் அதை அவன் விரும்பவில்லை.தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை விட எவ்வளவோ முயன்றும் அது நேர்முக தேர்வில் வெளிப்பட்டு விடுகிறது.சௌமியா ஃபோன் பண்ணியிருந்தாள்