அந்தி மாலை

  • 159
  • 51

மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் என்ற பாட்டை ஜானு முணுமுணுத்து கொண்டே மொபைல் பார்த்துக்கொண்டிருந்தாள் . இந்த மாலை பொழுது அவளை போன்ற படித்து முடித்து கல்யாணத்துக்கு அல்லது வேலைக்கு செல்வதற்கு தயாரான பெண்களுக்கு ஆறுதலான நேரம். வீட்டில் குடும்ப உறுப்பினர்களோடு டிவி பார்க்கலாம் ஏதாவது கேம்ஸ் விளையாடலாம். ஜானுவுக்கு எந்த கவலையுமில்லை . அவளுக்கு தம்பி ஒருத்தன் இருந்தான். காலேஜ் ஃபர்ஸ்ட் இயர். அவனோடு சண்டை போட கூட முடியாது. அவன் ஹாஸ்டல் ஒன்றில் தங்கி படித்து வந்தான். வார கடைசியில் எப்போதாவது வருவான். அவனுடைய ப்ரோபோசல் கதைகளை கேட்க ஸ்வாரசியமாய் இருக்கும். இவளுக்கும் காதலிக்க ஆசைதான் ஆனால் அப்பா ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். அப்படிப்பட்டவள் வாழ்க்கையில் வந்தவன்தான் ஆனந்த் . பெயர் ரொம்ப பழசாய் இருக்கிறதென்று குறை பட்டு கொள்ள வேண்டியதில்லை. ஆள் நல்ல ஜிம் பாடி.. நல்ல உயரம் . அவன் இவள் வீட்டுக்கு