வெயில் காலம்

  • 3.5k
  • 906

சுகுமாரனும் செல்வியும் ஒரு வருடம் முன்பே பேசி வைத்த விஷயம்தான் அது. மருத்துவ படிப்பு படிக்க வைக்க மகளுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்பது தான் அது. அதற்காக தங்களின் பூர்வீக நிலத்தை விற்று விட்டிருந்தார்கள் . தங்களுக்கு ஒரு மகன் இருப்பதையே அவர்கள் மறந்து விட்டார்கள். ஸ்ரீ டாக்டர் பட்டம் வாங்குவதை கண்ணால் பார்த்து விட்டுத்தான் மறுவேலை என்பதை போல அவர்கள் ஒட்டுமொத்த குடும்பமும் இயங்கியது. ஸ்ரீ என்கிற ஸ்ரீதேவி அந்த வீட்டின் முதல் பட்டதாரி . அவள் அண்ணன் குமரேசன் வெளிநாட்டில் கம்பி fitter வேலை பார்த்து வந்தான். இப்போது இரண்டாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் ஸ்ரீ ஐ பார்க்க காலையிலேயே கிளம்பிக்கோணடிருந்தார்கள் சுகுமாரனும் செல்வியும் . அவளுக்கு தேவையான உடைகள் , சில உணவு பொருட்கள் போன்றவற்றை வாங்கி கொண்டு போகலாம் என முடிவு செய்தார்கள். புத்தகம் வாங்கலாம் என்ற யோசனையை பக்கத்து வீட்டு அக்காதான் குடுத்தார்கள்