தன் தாயின் குரலைக் கேட்டவுடன் பிரேக் போட்டது போல் நின்ற சர்வேஸ்வரன் தன் தாயிடம் பதில் சொல்வதற்கு முன்பாக எதேச்சையாக முல்லையின் முகத்தை பார்க்க அதில் பதட்டம் கூடி இருந்தது….அவள் பதட்டத்தையும் தன் தாயின் அழைப்புக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் உள்ளது என்பதை நொடியில் புரிந்து கொண்டவன்…“அம்மா ஒரு முக்கியமான ஃபைல் என்னோட ரூம்ல இருக்கு… அத மட்டும் பாத்துட்டு வந்துடறேன்..” சர்வேஸ்வரன் அவசரமான குரலில் பதிலளிக்கவும்,இந்த நேரத்தில் இந்தப் பிரச்சனையை கூறினால் அது வேறு மாதிரியான விளைவை தரும் என்ற உணர்ந்த அவனின் அம்மா “சரிப்பா பாத்துட்டு வா…”ஒரு நிமிடம் தன் தரையை ஆழ்ந்து பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றான்…அவன் பார்வைக்கான அர்த்தம் அவன் அன்னைக்கு புரியாமல் போனாலும் முல்லையால் உணர முடிந்தது…இவ்வளவு நேரம் கழித்து வேலையில் இருந்து வரும் பிள்ளையிடம் சாப்பிட வலியுறுத்தி ஒரு வார்த்தை கூட கூறவில்லை…தான் கூற வந்ததை மட்டும் பேச நினைத்து, அதற்காக காத்திருப்பதாக