தேடி வந்த பேரன்பே....?? - 3

  • 630
  • 189

கடந்த ஒரு வாரமாக சர்வேஸ்வரனை தொடர்ந்து உற்று கவனித்ததில் அவனுக்கு அந்த வீட்டில் நடக்கும் அநியாயம் முல்லைக்கு எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது..இதில் தன் வாழ்வும் இணைந்து இருப்பதால், இப்போது தன்னையும் அதில் பகடைக் காயாக உபயோகித்து, சர்வேஸ்வரனின் வாழ்விலிருந்து விலக்கிவிட்டு,அவனின் முழு உழைப்பின் பலனையும் அனுபவிக்க பேராசைபடும் குடும்பத்தினரின் உண்மை முகம் விகாரமாக வெளிப்பட்டிருக்கிறது...ஒருபுறம் சர்வாவிற்காக பரிதாபபட்டாலும், இன்னொரு பக்கம் தன் வாழ்வைப் பற்றி சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி அவர்கள் அழிக்க நினைப்பது கோபத்தை தீ கங்குகளாக உள்ளத்தை எரித்தது..இப்போது முல்லைக்கு இரண்டு வாய்ப்பு கண் முன்னே இருந்தது...ஒன்று அவன் குடும்பத்தின் உண்மை முகத்தை சர்வாவிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டி, அவனுடன் தன் வாழ்வை மாற்றி சந்தோஷமாக வாழலாம்...ஆனால் இப்போதும் சர்வாவின் மீது முழு கோபம் வடிந்து விட்டதா எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் பதில் கிடைக்கும்...ஏனெனில் இந்தக் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் ஓரளவிற்கு புரிபட்டாலும், அதில் சர்வாவின்