தேடி வந்த பேரன்பே....?? - 2

  • 2.5k
  • 1
  • 567

வாழ்க்கை என்பது எப்போதுமே ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஒரு பேழை.. அந்த பேழைக்குள் இருக்கும் ஆச்சரியங்களை சராசரி மனிதனால் கணிக்க இயலாது...அந்தப் பேழையிலிருந்து வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் ஒரு ஆச்சரியம் சர்வேஸ்வரனுக்கு காத்திருந்தது அன்றைய இரவு..ஆம், அவன் உலகை வெறுத்து தனிமையாக உணவு எடுத்துக் கொள்ளவதாக நினைத்து மனவலி கண்டது போல் அவன் தனிமையில் இருக்கவில்லை..அவன் உணவு உண்ணும் நேரத்தையும், அவன் முகத்தில் வந்து போகும் பாவனைகளையும், அவனின் தனிமையின் வலியையும் கணித்தபடி அங்கு இரு விழிகள் அவனை கண் சிமிட்டாமல் பார்த்தபடி ஊன்றி கவனித்தது..அவன் தனிமை வலியை உணர முடிந்தது.. முல்லைக்கு மனதின் ஓரம் ஏதோ ஒரு உணர்வு காலமாக அவளை ஊடுருவி அசைத்துப் பார்த்தது...அதற்காக உடனே மனம் சமாதானமாகி அவனிடம் சென்று பேசுவோம், அவனுக்கு உணவு பரிமாறவும் மனம் முன்வரவில்லை...ஆனால், ஏதோ ஒரு உந்துசக்தியால் அவனின் நடவடிக்கைகளை உற்று கவனித்தவாறு அமைதியாக அந்த இரவில் நின்றிருந்தாள்... இதுவரை அவன் எத்தனை மணிக்கு