அவன் அந்த மாளிகையின் உள்ளே நுழையும் போது, அவனின் மனம் போல வெறுமையாக காட்சியளித்தது..இத்தனைக்கும் நேரம் அப்படி ஒன்றும் அதிகம் ஆகிவிடவில்லை...ஆனாலும் அவரவர் தங்களின் இரவு உணவை உண்டு விட்டு,அது செரிமானம் ஆவதற்காக கேளிக்கை பேச்சும், வேடிக்கையுமாக இருந்து,இப்போது பறவைகள் கூடு அடைந்தது போல் தங்கள் அறையில் நித்திரையில் சொர்க்கத்தை எட்டிப் பார்த்தபடி இருப்பர்..இத்தனைக்கும் அந்த மாளிகையில் இன்றைய நிலவரப்படி குறைந்தது நாற்பது பேர் வேலைக்காரர்கள் உட்பட இருக்கின்றனர்..ஆனால் யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்