அன்பார்ந்த வாசகர்களுக்கு இது என்னுடைய முதல் படைப்பு . நான் எதேனும் பிழை செய்தால் அதை மன்னித்து எனக்காக துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்......ஓர் அழகிய கிராமம். கிராமத்தை சுற்றிலும் தென்னை,மா,கொய்யா என தோப்புகளும் பச்சை போர்வை போர்த்தியது போல வயல் வெளிகளும் நிறைந்த ஊரு ... விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்கள். வசதி படைத்தவர் ஏழ்மையில் உள்ளோர் என இருவகை பிரிவினர்..... இருவகை பிரிவினருக்கும் விவசாயம் தான் ஏழை எளிய மக்கள் அவர்கள் நிலங்களில் உழுது பயிரிட்டு அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். மேல்தட்டு மக்கள் அவர்களின் வேளாண்மை பொருட்களை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் லாபம் பெறுகின்றனர். அந்த கிராமத்தின் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவள் தான் நம் கதையின் நாயகி பொற்கொடி. இவள் பள்ளி படிப்பை ஊரில்உள்ள பள்ளியில் முடித்து