உயிர் 1 ஆதித்யா நிலவினி பகலெங்கும் புவியை ஆட்சி செய்யும் அந்த செங்கதிரோன் கூட வெளியே வர தயங்கும் அந்த மார்கழி மாத குளிரின் காலை வேளையில் வாசலில் நீர் தெளித்து கோலம் போட்டு முடித்து சமையலறையில் நுழைந்து காலை, மதியம் தேவையான சமையல் வேலையை ஆரம்பித்தாள் நம் நாயகி நிலவினி அவனுக்கு மட்டும் இனி." குட் மார்னிங் இனிமா"ஆதி காலை வணக்கம் கூறினான். "குட் மார்னிங் அத்தான், பிரஷ் பண்ணியாச்சா.வாங்க டீ குடிப்போம்"என்று இருவருக்கும் கலந்து எடுத்து வந்து பேசிக்கொண்டே டீயை அருந்தினார்கள். நிலா "அத்தான் இன்னிக்கு நான் நேரமா போனும் ஆபீஸ் ல முக்கியமான ஒர்க் இருக்கு". ஆதி "ஓகேடா நான் குளிச்சிட்டு வரேன்கிளம்பலாம்"என்று கூறி குளிக்க சென்றான். அவன் ஆதித்யன் ஒரு மெக்கானிக் செட்டில் அஞ்சு வருசமா வேலை பார்க்கிறான். நிலவினி B. sc முடித்து விட்டு சாப்ட்வேர் ல் வேலை செய்கிறாள்.