நந்தவனம் - 15

அழும் நந்தனாவைப் பார்க்க அர்ஜுனிற்கு கஷ்டமாக இருந்தது, நந்தனா ப்ளீஸ் அழுறத நிறுத்து யாரவது பார்த்த தப்ப நினைக்கப்போறாங்க என்றான், இருக்கும் இடம் கருதி நந்தனாவும் தன் அழுகையை அடக்கினாள். பின் சிறிதுநேரத்திற்கு அங்கு கடல் அலையின் ஓசையை தவிர வேறு எந்த பேச்சுகளும் இல்லை. நீண்ட மௌனத்திற்கு பிறகு நந்தனா பேசத் தொடங்கினாள், அப்ப நீங்க துர்காவுக்கு பயந்துதான் கல்யாணம் வேண்டான்னு சொல்றீங்களா? இல்ல, எனக்கு பயந்து வேண்டான்னு சொல்ற, திருமண வாழ்க்கைக்கு நான் ரெடி ஆகிட்டேனானு தெரியாமலே ஸ்வாதியை திருமணம் செஞ்சுக்கிட்டேன், அதுக்கப்புறமும் அவ என்ன செய்றா, அவளோட பிரச்சனைகள் என்னனு தெரியாமலே என்னோட வேலை, என்னோட முன்னேற்றம்னு ஓடிட்டு இருந்துட்டேன். ஒரு வகையில ஸ்வதியோட மரணத்துக்கு நானும் காரணம். ஒரு கணவனா அவளுக்கு நான் எதையும் சரியா செய்யல. என்னோட கேரியர்ல சக்ஸஸ் பண்ணிட்டேன், ஆனா பேமிலி லைப்ல மோசமா தோத்துட்டன். என்னால திரும்ப ஒரு பொண்ணோட