நந்தவனம் - 14

  • 312
  • 138

அங்க போயிட்டு 15 நாள் கழிச்சு வந்த ஸ்வாதி கண்டிப்பா நான் ஊருக்கு போகும்போது இருந்த ஸ்வாதி இல்லை என்று எனக்கு தோன்றியது. பெருசா பேசலைனாலும் நான் வீட்டுல இருந்தா என்ன சுத்தி சுத்தி வருவா. ஆனா வந்ததுல இருந்து விலகி விலகி போக ஆரம்பிச்சா. அப்புறம் அடிக்கடி அம்மா வீட்டுக்கு போக ஆரம்பிச்சா. எங்க அம்மாவோ இந்த சமயத்துல அப்படித்தான் இருக்கும் நீ ஒன்னு கவலை படாதனு சொன்னாங்க. ஒரு கட்டத்துல அவங்க அம்மா வீட்டுலயே இருந்துகிட்டா. நானும் அடிக்கடி அங்க போய் அவளை பார்த்துட்டு வந்தேன். அங்க அவ என்கூட பேசுனதை விட அவளோட தங்கச்சியும், அப்பாவும் தான் அதிகமா பேசுனாங்க. ஒருகட்டத்துல நான் அங்க போகுறத நிறுத்திட்டேன். அதுக்கப்புறம் நான் அவளை டெலிவெரிக்கு உள்ள போறதுக்கு முன்னாடி தான் பார்த்தேன், அப்ப அவ என்னோட கையை பிடிச்சுக்கிட்டு சொன்னது இன்னும் என்னோட காதுல கேட்டுகிட்டே இருக்கு. இங்க