நந்தவனம் - 13

  • 285
  • 105

அர்ஜுனின் வீட்டை அடைந்தவர்கள், யாழினி ரேவதியுடன் வீட்டின் முன் அமைந்திருந்த தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அங்கு சென்றனர். நந்தனாவைப் பார்த்த யாழினி வேகமாக ஓடிவந்து அவளை அணைத்துக்கொண்டாள்,  யாழினியை அணைத்துகொண்டபொழுது இதுவரை இல்லாத ஒரு புதிய  உணர்வு  நந்தனாவிற்கு தோன்றியது, இவ என்னோட பொண்ணு யாரு சொன்னாலும் இனி இவளைப் பார்க்காமல் மட்டும் இருக்க கூடாது என்று நினைத்தவள், யாழினியின் கன்னத்தில் முத்தமிட்டாள். தோஸ்த் ஏன் என்ன பார்க்க நீங்க வரலை, நான் உங்களை ரொம்போ மிஸ் பண்னேன், அப்பா உங்களுக்கு உடம்பு சரி இல்லைனு சொன்னாரு, நிஜமாவா என்றால் யாழினி. ஆமா யாழ் குட்டி, அதுனாலதான் உன்ன பார்க்க வரல, இனி அடிக்கடி வர, சித்தப்பாகிட்ட சொல்லி நாளைல இருந்து உன்ன கிளாஸ்க்கு அனுப்ப சொல்றேன் ஓகே வா என்றவளைப் பார்த்து வேகமாக தலையை ஆட்டினாள் யாழினி. அப்ப என்ன யாரும் மிஸ் பண்ணலையா என்ற குரல் கேட்டு