விக்ரம் சொன்னதை கேட்டு அர்ஜுன் மட்டுமல்ல, சாவித்ரி, சந்தியா, கதிர் அனைவருக்குமே அதிர்ச்சி. நீங்க என்ன சொல்ரீங்க விக்ரம் என்று கேட்ட அர்ஜுனிற்கு, சதாசிவம் பதில் கூறினார். என்னோட பையன் சொல்றது சரிதான் தம்பி, உங்க அதிர்ச்சி எனக்கு புரியுது உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி நந்தனா அவளோட விருப்பத்த எங்ககிட்டத்தான் சொன்னா, அவளை உங்ககிட்ட சொல்ல சொன்னதே நான்தான்.என்னோட பொண்ண பற்றி எனக்கு நல்ல தெரியும் அவ ஒரு முடிவு எடுத்தா அதுல இருந்து அவ்வளவு ஈசிய மாறமாட்டா இது அவளோட வாழ்க்கை விஷயம், உங்கள கல்யாணம் பண்ணிக்க நாங்க சம்மதிக்கலைனா கண்டிப்பா அவ அதை மீற மாட்டா, ஆனா வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க ஒதுக்கவும் மாட்டா. எனக்கு என் பொண்ணோட விருப்பம் முக்கியம், அதேசமயம் உங்கள பத்தியும் தெரிஞ்சுக்கனும், அதுக்குத்தான் அவளை உங்ககிட்ட சொல்ல சொன்னன். நீங்க கதிர் கிட்ட அவளுக்கு எடுத்து சொல்ல சொல்லுவீங்க அதிகபட்சம் விக்ரம்