விழியோடு இமைபோலே..

  • 90
  • 54

மான்யா.. நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை. இப்படி ஊரைக் கூட்டி எங்களை அசிங்கப் படுத்தனும்னு எத்தனை நாள் நீ காத்துக்கிட்டு இருந்த. உன்னை கேட்டு தானே இந்த நிச்சயத்துக்கு ஏற்பாடு செஞ்சோம்.‌ அப்படி இருக்கும் போது இப்போ திடீர்னு வந்து இந்த நிச்சயத்துல விருப்பம் இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம் என்றார் நிச்சயமாக இருந்த மான்யாவின் சித்தி வெண்ணிலா.சித்தி.. என்னால இப்போ எதையும் விளக்கி சொல்ல முடியாது. வீட்டுக்கு போனதும் நானே உங்ககிட்ட உண்மையான காரணத்தை சொல்றேன். இப்போதைக்கு இந்த நிச்சயம் மட்டும் எனக்கு வேண்டாம்.‌ ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க என்றாள் மான்யா கலக்கத்துடன்.என்னத்த புரிஞ்சுக்கனும். இதுல நீ மட்டுமா சம்மந்தப்பட்டு இருக்க. உன்னோட தம்பியும் இதுல சம்மந்தப்பட்டு இருக்கான். இன்னைக்கு அவனுக்கும் தானே நிச்சயம் பண்ண போறோம். இப்போ நீ இந்த நிச்சயம் வேண்டாம்னு சொன்னா என்ன பண்றது. உன்னால அவனோட நிச்சயமும் நின்னு போகனுமா என்றார் உறவுக்கார பெண்மணி