நந்தவனம் - 10

  • 192
  • 72

தன்னை அவர்கள் கவனிக்கப் போவதில்லை என்று உணர்ந்த அர்ஜுன், இது ஹாஸ்பிடல் நியாபகம் இருக்கா என்று கேட்டுக்கொண்டே யாழினியின் மறுபுறம் சென்று அமர்ந்தான். எதுக்கு சம்மந்தமே இல்லாம இதை சொல்றீங்க என்றாள் நந்தனா, இப்படி உலகம் மறந்து அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கீங்களே அதான் சொன்னேன், என்ன பாஸ் ஆபீஸ்ல பேசுன ஆபீஸ்ல  அரட்டை அடிக்குறீங்கனு சொல்றீங்க, இப்ப ஹாஸ்பிடல்ல அரட்டை அடிக்குறன்னு சொல்றீங்க,  இதெல்லா உங்களுக்கே நியாயமா என்றாள், ஆமா ஆமா நான் சொன்னா உடனே நீ கேட்டுடுற மாதிரிதான் என்றவனை முறைத்தாள். அண்ணா டாக்டர் என்ன சொன்னாங்க என்று கேட்ட அரவிந்தை அப்போதுதான் பார்த்தான் அர்ஜுன், நீ இங்கதான் இருக்கியா நான் கவனிக்கவேயில்லை  என்று சொன்ன தன் அண்ணனை கண்டு தனக்குள் சிரித்திக்கொண்டான் அரவிந்த், நந்தனா தன்னை விட தன் அண்ணனுக்குத்தான் சரியான ஜோடி என்ற அவன் எண்ணம் மேலும் வலுப்பெற்றது. ஒரு புறம் காதலின் வலி இருந்தபோதும், அதை