பிறவி பைத்தியத்தை பார்ப்பது போல குழலியை பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். அவனது சமாதானங்கள் கொஞ்சல்கள் கிஞ்சல்கள் மிஞ்சல்கள் எதுவுமே அவளிடம் எடுபடவில்லை. தங்கையை காட்டி பொறுப்பை கூறினால் சமாதானம் ஆகி விடுவாள் என்று எண்ணி நடக்காத விஷயத்தை நடப்பதை போல திரித்து கூற, குழலி அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருந்த ஐஸ்வர்ய நந்தினி அக்கினியாய் முறைத்தாள்." உன் தங்கச்சிக்கு கல்யாணமா? எனக்கு காது குத்திட்டாங்க சின்ன வயசுலயே. உன் தங்கச்சி மொகரைய பாத்தியா? உன் அக்கா செல்வா, சொல்லும் போது கூட நான் நம்பல. உன் தங்கச்சி முகத்துல மூக்கு எங்க இருக்கு? வாய் எங்க இருக்குனு தெரியுதா? அங்கங்க புத்து வெச்ச மாறி ஓ மை கோட். வருஷக்கணக்கா தேடுனா கூட உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்கிறது கஷ்டம். இந்த அழகுல மூணு மாசத்துல மாப்பிள்ளை பார்த்து கல்யாணமா? " யார் மேலும் இருக்கும் கோபத்தில் இதுவரை பேசி அறியாத