நந்தவனம் - 8

அர்ஜுனை அங்கு பார்த்ததில் ஏற்பட்ட அதிர்ச்சி குறைய நந்தனாவிற்கு சில நிமிஷங்கள் எடுத்தது. அந்த சமயத்தில் டாக்டர் அழைத்தார் என்று நர்ஸ் வந்து சொல்ல, அர்ஜுனும், அரவிந்தும் டாக்டரை பார்க்க சென்றனர். அவர்கள் சென்றவுடன் கதிர் நந்தனாவிடம், நந்து கிளம்பு போலாம் என்றான். எங்க? வீட்டுக்கு போலாம் என்றான் கதிர், அப்ப யாழினி என்றவளை நேராக பார்க்காமல் அதுதான் அவளோட அப்பா இருக்காரே என்று சுவரை பார்த்தபடி கூறினான். நீ சொல்லுறத புரிஞ்சு தான் சொலிறிய கதிர்? நான் வரல, யாழினி கண் முழிச்சா என்ன தேடுவாள். அவள என்னால ஏமாத்த முடியாது என்றாள். அப்படினு சொல்லி உன்ன நீ ஏமாத்திக்கபோறயா, என்றவனை கண்ணில் வலியுடன் பார்த்தாள் நந்தனா. தன் தோழியின் வலியை காண பிடிக்காமல், இப்ப நான் என்ன செய்யனும்? கூட இருபோதும் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள். இப்போதைக்கு யாழினி தான் முக்கியம்