ஈஸ்வரன் வீடே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே நாளை ஈஸ்வரனின் செல்வமகள், அதிர்ஷ்ட தேவதை, செல்வக்குமாரியின் திருமண நாள். நிச்சயம் முடிந்து மூன்று மாத இடைவெளி கடந்த நிலையில் வந்த முதல் முகூர்த்தத்திலேயே திருமணத்தை அவசரமாக குறித்து விட்டார் ஈஸ்வரன். என்னதான் அவர் சமூகத்தில் நல்ல மதிப்பான பெயரோடு, நாகரீகத்தில் ஊறிப் போயிருந்தாலும் சில பல விஷயங்களில் அவரை மாற்ற முடியாது. மகளும் அவளது வருங்கால கணவரும் அவ்வப்போது வெளியே சென்று நேரம் தாழ்ந்த வீடு வந்து சேரும்போது, பெற்ற தகப்பனாக அவரது அடிவயிறு பற்றி எரிந்தது.மகளிடம் வெளியே போகாதே என சொல்ல முடியவில்லை. மருமகனிடம் திருமணத்திற்குப் பிறகு ஜோடியாக ஊர் சுற்றலாமே நாசுக்காக கேட்டு பார்த்தார். " என்ன அங்கிள் எந்த காலத்துல இருக்கீங்க நீங்க? வாழ்க்கைய என்ஜாய் பண்ணனும் அங்கிள் என்ஜாய்" சிறிதும் மட்டு மரியாதை இல்லாமல் ஈஸ்வரன் தோளில் கை போட்டு, கீரிப்பிள்ளை பிராண்டி விட்டது