காக்க காக்க கனகவேல் காக்கநோக்க நோக்க நொடியில் நோக்கதாக்கத் தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட..இறுக்கமாக மூடிய விழிகளின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீர் கன்னங்களில் வழிந்து ஓடிடும் முன்பே விழி மடல் திறந்து அதற்கு முட்டுக் கட்டை போட்டாள் ஐஸ்வர்ய நத்தினி. சில நேரங்களில் வாய் விட்டு கூற முடியாத பிரார்த்தனையை ஒரு துளி கண்ணீர் வார்த்தையாக வடித்து விடும். சொல்லிச் சொல்லி மரத்து போன விஷயம். சொல்வதற்கு அவளிடம் வார்த்தையே இல்லை. வார்த்தைகள் வற்றி போகும் போது கண்ணீர் அந்த இடத்தை நிரப்புவது இயல்பு தானே?"நர்மதா இன்னும் எவ்ளோ நேரம்டி வெயிட் பண்றது. உன் பொண்ணு என்ன கோவில் பூசாரியா? சாமி கும்பிட போனா ஒரு மணி நேரம், குளிக்கப் போனா ஒரு மணி நேரம், ஒருவேளை சொன்னா முடிஞ்சது.அன்னைக்கு நாள் பூரா அதையே செஞ்சிகிட்டு இருக்கிறது. சரியான அசமஞ்சம்.. பட்டுனு வர சொல்லுடி உன் பொண்ண" ஈஸ்வரன்