துர்காவை முதல் நாள் ஒத்திகைக்கு வரச்சொல்லி இருந்தார்கள், வந்த துர்கா பண்ணிய ஆர்பாட்டத்தில் அனைவருக்கும் தலைவலியே வந்துவிட்டது. ஒத்திகைக்கு வந்த துர்கா கதையை மாற்ற சொன்னாள், தனக்கு ஆடைகள் இப்படி இருக்கவேண்டும், கேமராவை இந்த ஏங்கிலில் வைக்க வேண்டும் என்று அனைவருக்கும் பாடம் எடுத்தாள். மொத்த டீமும் துர்காவோடு வேலை செய்ய முடியாது என்று நந்தனாவிடம் தெரிவித்தனர். இதுக்குத்தான் பாஸ் வேண்டான்னு சொல்லியிருப்பாரு போல நான் தான் தேவையில்லாம பெமினிசம் பேசி சொதப்பிட்டேன். என்று புலம்ப ஆரம்பித்தாள் நந்தனா, அவளைப் பார்த்து சிரித்த கதிரிடம் இப்ப எதுக்குடா சிரிக்குற ஒழுங்கா ஒரு வழி சொல்லு என்றாள். அது சரி, பண்றது எல்லா நீ பண்ணிட்டு நா என்ன வழி சொல்றது, வேணுனா உனக்கு சீட்டு குலுக்கி போட ஐடியா குடுத்த ஜீனியஸ் கிட்ட வழி கேளு என்றவனின் முதுகுலையே ஒன்று போட்டாள் ஜெனிஃபர். ஹே பண்றதெல்லா நீங்க ரெண்டுபேரும் பண்ணிட்டு என்ன