நந்தவனம் - 2

  • 339
  • 120

அன்று அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற நந்தனா, யாருடனும் பேசாமல் தனக்குள்ளேயே அர்ஜுனைத் திட்டிக்கொண்டு இருந்தாள். நந்தனா அர்ஜுனைத் திட்டி முடிப்பதற்குள் நாம் நந்தனா குடும்பத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம். நந்தனாவின் அப்பா சதாசிவம் பேங்க் மேனேஜர், அம்மா சாவித்ரி பள்ளி ஆசிரியராக இருந்து தற்போது விருப்ப ஓய்வு பெற்று வீட்டைக் கவனித்து கொண்டிருக்கிறார். அவர் விருப்ப ஓய்வு பெற முக்கிய காரணம், அவரது செல்ல மருமகள் சந்தியா, நந்தனாவின் அண்ணன் விக்ரமின் காதல் மனைவி, இப்போ ஆறு மாத கர்ப்பிணி. விக்ரம் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான், சந்தியா கல்லூரி விரிவுரையாளராக இருக்கிறாள். கல்லூரிக் காலத்தில் இருந்து ஐந்து வருடமாகக் காதலித்து வந்த விக்ரம்-சந்தியா ஜோடியின் கல்யாணத்திற்கு முக்கிய கரணம் நம்ம நந்தனாவும்,அவளோட தோஸ்த் கதிரும்தான். தாய் தந்தை இல்லாத சந்தியாவிற்கு திருமணத்திற்குப் பிறகு விக்ரமின் வீடே அனைத்துமாகிப்போனது. நந்தனாவும், சந்தியாவும் தோழிகள் போல ரகசியம் பேசிப்பாங்க. இவங்க இத்தனைபேர் இருந்தாலும்