சதீஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினாள் வைஷ்ணவி.சதீஷ் ஜஸ்ட் ஒன் வீக் டைம் குடுங்க வீணாவை கொன்னவங்களை கண்டுபிடிச்சிடறேன். நீங்க இது வரைக்கும் என்ன பண்ணினீங்க ?. நான் என்னோட தண்டனையை குற்றம் செஞ்ச, அதுக்கு உடந்தையா இருந்த எல்லோருக்கும் குடுக்க போறேன் என்றான். ப்ளீஸ் சதீஷ் நீங்க தப்பு மேல தப்பு பண்ணுறீங்க நல்லவிதமா சரண்டர் ஆயிடுங்க என்றாள் வைஷ்ணவி.போன் இணைப்பை துண்டித்தான் சதீஷ். எவ்வளவு தீவிரமாக தேடிய போதும் சதீஷ் கிடைக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து நெடுஞ்சாலையின் ஓரத்தில் கத்தி குத்து காயங்களுடன் குமாரின் உடல் கிடைத்தது. வைஷ்ணவி பதட்டத்துடன் ஸ்போட்டுக்கு விரைந்தாள். எல்லா பார்மலிடிஸ் முடிந்த பிறகு குமார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.பொதுமக்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கன்ட்ரோல் செய்ய முடியாமல் போலிஸ் தடுமாறியது. கூடவே அரசியல் கட்சியினரும் சேர்ந்து கொண்டனர். போலீஸ் உயரதிகாரிகள் வைஷ்ணவியை suspend செய்ய போவதாக செய்தி பரவியது.ஆனால் எப்படியோ இதுதான்