மலர்விழி தன்னுடைய உதவியாளர்களில் யாரோ ஒருவர்தான் தன்னுடைய அடையாளத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும், அவர்களில் ஒருவர்தான் வீணாவையும் யுவனையும் கொல்ல கத்தி வாங்கி கொடுத்திருக்க வேண்டும் என எண்ணினாள். சதீஷ் வீணா கொலையில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் கொல்ல தீர்மானித்தான் அதோடு யாரோ அவனுக்கு மலர்விழி காரை கடத்த உதவி செய்து இருக்கிறார்கள். சுஜா இந்த விஷயங்களை தீப்தியிடம் கூறினாள். சுரேஷ் தீப்தியை நெருக்கமாக கண்காணித்து வந்தான். தீப்தியின் முன்னாள் காதலனான பிரவீனிடம் சொல்லி வைத்திருந்தான். சுஜாவும், தீபனும் தீப்தியை பார்த்து சில நாட்கள் பெங்களூரில் திலக் மற்றும் தீப்தியுடன் தங்கி வர விரும்பினர். தீப்தியிடம் தீபன் பேசினான். அதுக்கென்ன எப்போ வேணா வாங்க என்றாள். தீபன் தீப்தி சந்தோஷமா இருப்பாளா? இல்லை நம்ம மேல கட்டயபடுத்தி கல்யாணம் பண்ணிவேச்சோம் அப்படின்னு கோவமா இருப்பாளா? என்றாள். அதுதான் நேரிலேயே பார்க்க போறோமே என்றான் தீபன். ம் எனக்கு என்னவோ கவலையா இருக்கு உனக்கு அதை