யாதுமற்ற பெருவெளி - 21

  • 546
  • 222

போலீஸ் கல்யாணமண்டபம் வாசலில் இருந்த சிசிடிவி footage மறுபடியும் செக் செய்த போது வீணா இறந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஆள் காரில் இருந்து இறங்கி குமரேசனை தூக்கி வருவது தெரிந்தது. அவன் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்ததால் அவனுடைய முகம் தெளிவாக தெரியவில்லை. அந்த காரின் நம்பர் plate தெளிவாக தெரிந்தது. குமரேசனின் postmortem ரிப்போர்ட்டில் அவனுக்கு மயக்க மருந்து ஸ்ப்ரே அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. குமரேசனை ஏற்றி வந்த கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார். அவர் பெயர் மலர்விழி என்றும் கிரிமினல் வக்கீலாக பணிபுரிபவர் என்று தெரிந்தது. அவருடைய கார் ஏற்கனவே காணவில்லை என போலீசில் கம்ப்ளைன்ட் குடுத்திருந்தார்.போலீஸ் அந்த காரை காணவில்லை என எல்லா ஸ்டேஷனுக்கும் இன்போர்ம் செய்து தேடத் தொடங்கியது .மலர்விழியை விசாரித்தபோது தனக்கு குமரேசனையோ அந்த கார் கடத்தியவனையோ தெரியாது என்றார். இதற்கிடையில் குமரேசன் போனில் வீணாவுடன் மணி நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள்