யாதுமற்ற பெருவெளி - 20

  • 767
  • 333

திலக் தீப்தி கல்யாண ஏற்பாடுகளை செய்தார்கள் சுஜாவும், தீபனும். கல்யாணத்தை பிரம்மாண்டமாக ஆக நடத்த வேண்டும் என்பது தீபனின் விருப்பம் அதன்படியே நடைபெற்றது. நிறைய வி ஐ பி க்கள் கலந்து கொண்டனர். குமாரிடம் போலிஸ் விசாரணை நடைபெற்றது . ஆனால் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. திலக் தீப்தி கல்யாணத்தில் தீப்திக்கு நெருக்கமானவர்கள் நிறைய பேர் கலந்து கொண்டனர்.அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. கோர்ட் சுஜாவுக்கு விவாகரத்து வழங்கியது. யுவன் இறந்து ஒரு வருடங்கள் ஆகி விட்டிருந்தது. கல்யாணத்துக்கு பிறகு பெங்களூர் திரும்ப போக விரும்பினாள் தீப்தி. அங்கேயே திலக்குடன் இருக்க விரும்பினாள். தீபன் அவளை எச்சரித்தான். அங்கே தனியாக போக வேண்டிய அவசியம் என்ன என்றான். அனால் அவள் கேட்கவில்லை. தீபனும், சுஜாவும், திலக்கையும், தீப்தியையும் பெங்களூர் வழி அனுப்பி வைத்தனர்.யுவனுடைய மரணம் நிகழ்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டபடியால் அவனுடைய ஈமசடங்குகளை தீபன் ஐயர் ஒருவரை கொண்டு செய்வித்தான். தீபனுடைய