தீபனுக்கும்,சுஜாவுக்கும் தன்னுடைய நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தாள் தீப்தி.எல்லோருடனும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டனர். புகைப்படம் எடுத்துகொண்டு விடை பெற்றனர். பாவம் தீப்தி எப்படியோ துணை இல்லாமல் இருக்கிறாள் என்றான் தீபன். சீக்கிரமே அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்றாள் சுஜா.இருவரும் ஹோட்டல் அறைக்கு திரும்பினர். மணி ஏதோ ஒரு வட மாநிலத்தில் சுற்றி திரிந்த போது போலிசாரால் கைது செய்யப்பட்டான். அவன் பிடிபட்ட செய்தியை சுரேஷ் தீபனுக்கு சொன்னான். நான் உடனே சென்னை வருகிறேன் என்றான் தீபன். சுஜா நான் இன்னும் ஒரு வாரம் இங்கு இருந்துவிட்டு வருகிறேனே என்றாள்.சரி உன் விருப்பம் என்றான். மணி கைது செய்யப்பட செய்தியை சதீஷுக்கும் சொல்லி இருந்தான் சுரேஷ். தீபன் சென்னைக்கு வந்ததும் அவனை போய் இருவரும் பார்த்தனர். சதீஷ் தாடியும்,சோகம் நிரம்ப இருப்பதை பார்த்ததும் வருத்தம் அடைந்தான். சதீஷ் நீ ஒரு தவறும் செய்யவில்லை பிறகேன் உன்னை வருத்திக்கொள்கிறாய் என்றான். போலிஸ்