யாதுமற்ற பெருவெளி - 17

  • 78

அந்த கடையின் சிசிடிவி footage செக் செய்து பார்த்த போது மூன்று பேர் ரவியை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து சென்றது தெரிய வந்தது.அடுத்தடுத்த கொலைகளால் போலிசுக்கு பெரிய தலைவலி ஏற்பட்டது, முதலில் யுவன், இப்போது ரவி. பாஸ்கர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. ரவியை கடத்தி கொன்றவர்கள் யாரென கண்டறிய வேண்டும். தீபனும், சுரேஷும் தொடர்ந்து யுவன் கொலையாளியை கண்டறிய முடியாமல் திணறினர்.பாஸ்கரை தேடும் பணியை போலீஸ் முடுக்கி விட்டது. தீபனும் சுஜாவும் கோவிலுக்கு போயிருந்தார்கள். கடவுளே எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை என்று சுஜா மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தாள். தீபன் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான். சீக்கிரமே எல்லா பிரச்னையும் தீர வேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டான் .தீபன் என்ன சுஜா நாம் சிம்பிள் ஆக register திருமணம் செய்து கொண்டால் என்ன என்றாள். ம் நானும் அது பற்றி யோசித்தேன் வக்கீலிடம் பேசிவிட்டு ஒரு நல்ல முடிவுக்கு வருவோம்