ரவிதான் போன் பண்ணியிருந்தான். என்னாச்சு ரவி என்றான் சுரேஷ் .நான் உங்ககிட்ட பேசிட்டு போனதுக்கப்புறம் யாரோ ஒருத்தன் எனக்கு போன் பண்ணி அனாவசியமா இந்த விஷயத்துல தலையிடாதே உன் உயிர் போயிடும்னு மிரட்டினான் சார். ஓ ..நீங்கதான் சீக்கிரம் அவனை கண்டுபிடிக்கணும் என்றான். நீங்க ஒன்னும் பயப்படவேண்டாம் ரவி சீக்கிரம் அவனை கண்டு பிடித்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் சுரேஷ்.யுவன் மரணத்துக்கு பின்னால் யார் இருப்பதென்று ஒரே குழப்பமாக இருந்தது.போலீஸ் யுவன் கொலைக்கான மோட்டிவ் கண்டறிய முடியாமல் திகைத்தார்கள். யுவனுக்கு நெருக்கமான யாரோதான் அவன் படுக்கையறை வரை சென்று கத்தியால் குத்தி கொன்று இருக்கிறார்கள்.தீபன் தன்னுடைய எல்லா வேலைகளையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு யுவன் கொலையாளியை கண்டறியும் முயற்சியில் இறங்கினான். சுஜாவுக்கு சப்போர்ட் ஆக இருக்குமென்று வீணாவை கொஞ்சநாட்கள் வந்து சுஜாவோடு தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டான். அவளும் சுஜாவுக்கு ஆறுதலாக இருந்தாள். ரவியிடம் அவனுக்கு போன் பண்ணி மிரட்டியவனின் நம்பர்