சுரேஷுக்கு போன் செய்தான் அவன் எடுக்கவில்லை . தீபன் லொகேஷனை நெருங்கி விட்டான். அவனுடைய மனதில் வெவ்வேறு எண்ணங்கள் ஓடின. அதில் தனக்கு ஏதும் ஆகிவிட்டால் சுஜாவின் நிலை என்ன என்பதும் சேர்ந்தே ஓடியது. சுரேஷ் தெருமுனையில் நிற்பது தெரிந்தது. வண்டியை ஓரமாக பார்க் செய்து விட்டு சுரேஷை நெருங்கினான். என்னடா ஆச்சு ஏன் போனை எடுக்கலை என்னவோ எனக்கு தனியா போக யோசனையா இருந்தது என்றான். சரி வா போகலாம் என்றான். சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும் சுஜா தனியாக இருப்பாள் என்றான் தீபன். கால்லிங் பெல் அடித்தவுடன் கதவு திறக்கப்பட்டது ஒரு பெண்மணிதான் திறந்தாள்.ரவி இல்லையா என்றான். அவர் இப்போதான் ஊர்லேயிருந்து வந்தாரு தூங்கிட்டு இருக்காரு எழுப்பவா என்றாள். வேண்டாம் வேண்டாம் நாங்க வந்துட்டு போனதா சொல்லுங்க இந்த கார்டை அவர்கிட்ட குடுங்க என்றான் சுரேஷ். சுரேஷ் ஏன்டா இப்படி பண்ணினே அவனை நாலு சாத்து சாத்துவேன்னு பார்த்தா