யாருடா நீ உனக்கென்ன வேணும் என்றான் தீபன். அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு நிமிடம் சுஜாவை நினைத்துதான் கவலைப்பட்டானே தவிர அவனுடைய பதவி, அதிகாரம், அந்தஸ்து பற்றி அவன் கவலைப்படவில்லை. சுஜாதாவிடம் இது பற்றி சொல்லலாமா வேண்ண்டாமா என யோசித்தான். பிறகு வீணாய் அவள் குழம்ப வேண்டி வரும் என்பதால் அதை அப்படியே விட்டு விட முடிவு செய்தான். அந்த போன் நம்பர் யாருடையதென்று trace செய்ய அவனுடைய டிடெக்ட்டிவ் நண்பனுக்கு போன் செய்தான். என்னப்பா இது ஏதோ பிராங்க் ஆக கூட இருக்கலாம் இதற்கு போய் பயப்படுகிறாயே என்றான் சுரேஷ். ஹேய் இது எனக்காக இல்லை அவளுடைய பாதுகாப்புக்காக என்றான் தீபன். நிச்சயம் எனக்கு ஒரு வாரம் டைம் குடு என்றான். தாராளமா எடுத்துக்கொள்.சுரேஷ் நம்பகமானவன் தான் அதே சமயம் விளையாட்டுத்தனமானவன் . எப்படியோ அவன் யாரென்று கண்டுபிடிக்கத்தான் வேண்டும் . தீபன் சுஜாவுக்கு போன் செய்தான் சுஜா எங்கிருக்கிறாய்