யாதுமற்ற பெருவெளி - 12

  • 192
  • 78

அவள் பறக்கும் திசையை அவளே தீர்மானித்தாள்.அந்த இரவு அழகாகிக்கொண்டே போனது, அவளுக்கு தீபன் மேல் காதல் பெருகிக்கொண்டே போனது. அவள் அவன் கூட எத்தனை நெருக்கமாக இருந்த போதும் தீபன் தள்ளியே இருந்தான்.தீபன் அடுத்து என்ன என்பது போல அவளை பார்த்தான். தீபன் நான் உன்னுடன் நீண்ட காலம் வாழ விரும்புகிறேன். அது உன் மீது கொண்ட காதலுக்காக மட்டுமே. நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அதுவரை நாம் சற்று அவன் அவள் வாயை மூடினான். நீ சொல்லவே வேண்டாம் வெறும் உடல் மீது ஆசை கொண்டு உன்னை சிறிய எல்லைக்குள் அடைக்க விரும்பவில்லை. உன் விருப்பம் போல இரு என்றான் . மறுநாள் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தார்கள். அவர்களை பிரிக்கும் சக்தி ஒன்று இருப்பதாக அவர்கள் கருதவில்லை. யுவனை எப்படி சமாளிக்க போகிறாள் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. யுவன் காலையில் போன் பண்ணியிருந்தான். அவள் பொறுப்பாக பதில் சொன்னாள்.