யாதுமற்ற பெருவெளி - 11

  • 684
  • 279

அந்த வார கடைசியில் யுவனும் சுஜாவும் பெங்களூர் சென்றனர் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. பெங்களூர் அவர்களுக்கு சந்தோஷத்தையும் நிறைவையும் தர வேண்டுமென தீபன் வாழ்த்து அனுப்பியிருந்தான். தீப்தி சுஜாவுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தாள். சுஜாவுக்கு படபடப்பு இருந்த போதும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டாள்.தீபன் அடுத்த வாரம் வந்து பார்ப்பதாக சொல்லியிருந்தான். புது இடம் புது வாழ்க்கை என சுஜாவின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிம்மதியைக் கொடுத்தன அது எவ்வளவு தூரம் நீடிக்குமென சுஜா நினைத்துக்கூட பார்க்கவில்லை அவருடைய காதல் நிலைக்குமா என்பதெல்லாம் அவள் யோசித்துக் கூட பார்க்கவில்லை. மறு புறம் யுவன் தன்னுடைய நீண்ட கால திட்டங்களை பற்றி யோசிக்காமல் சுஜாவுக்கு எது சந்தோஷமோ அதையே தனது சந்தோஷமாக கருதினான் . தீபன் வரும்போது அவனை வீட்டுக்கு அழைக்க வேண்டும் என சுஜா நினைத்திருந்தாள். யுவன் மறுப்பேதும் சொல்லவில்லை.வீணா ஃபோன் பண்ணி இருந்தாள். புது