Kvs கல்லூரி...விடுமுறை முடிந்து இன்று தான் திறக்கப்படுகிறது.... காலை நேரம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.....முதலாம் ஆண்டு கல்லூரியில் நுழையும் மாணவ மாணவிகளை சீனியர் மாணவ மாணவிகள் ராக்கிங் செய்து கொண்டிருக்க.... மை யிட்ட கண்கள் மருண்டு விழிக்க, கைகள் இரண்டும் நோட்டை இருகப்பற்றி இருக்க தேகம் ஒருவித நடிக்கததுடனே நடந்து வந்து கொண்டிருக்கிறாள் அவள் மான்விழி....பெயருக்கேற்றார் போல் தான் அவளது விழிகள் துள்ளி கொண்டு இருக்கிறது.மற்ற மாணவர்களை களாட்ட செய்து கொண்டிருந்த அவன் ருத்ரா, அவளை கண்டதும் மற்றவர்களை அனுப்பிவிட்டு அவளை அழைக்கிறான். ஏய்.....என்று கீழ் உதட்டை முன் பற்களால் கடித்து கண்ணை உருட்டி கையை நீட்டி அழைக்க....அவனை பார்த்த மாத்திரத்தில கண்கள் கலங்க தொடங்கி விட்டது..... இருப்பினும் அவன் முன்பு போய் நின்றாள். உன் பேர் என்ன?? என்றான் திமிராக....மான்விழி...என்றால் அவள் கூறியது அவளுக்கே கேட்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.சரியா கேக்கல என்றான் மிரளும் அவளின் விழிகளை பார்த்து