யாதுமற்ற பெருவெளி - 10

  • 48

யுவன் பெங்களூர் வீட்டிற்கு சாமான்களை மாற்ற டிரான்ஸ்போர்ட் ஏற்பாடு செய்திருந்தான். எல்லாவற்றையும் பேக் செய்ய தொடங்கியிருந்தார்கள் யுவனும் ,சுஜாவும் .சுஜா இரண்டு நாட்கள் லீவு போட்டிருந்தாள். வீணாவும் வந்து பார்த்துவிட்டு போனாள்.சுஜா இரண்டு நாட்கள் கழித்து ஆபீஸ் வந்த போது ஏகப்பட்ட வேலைகளும் குவிந்திருந்தன . அவள் சற்றே மலைத்து போய்விட்டாள். டேக் யுவர் ஓன் டைம் என்று தீபன் சொல்லிவிட்டு போய்விட்டான். வேலையெல்லாம் முடிக்க மணி இரவு 9 ஆகிவிட்டது. யுவனை வரசொல்லி சொல்லி இருந்தாள். இன்னும் காணவில்லை. வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. ஒரு வழியாக 9 30 மணிக்கு யுவன் வந்து சேர்ந்தான். சாரி சுஜா கொஞ்சம் லேட் ஆகிவிட்டது என்றான். கம்பெனி கப் இருந்த போதும் யுவனோடு பைக்கில் செல்லவே விரும்பினாள். மறுநாள் மழையில் நனைந்தது ஜுரம் வந்து விட்டது. இன்னைக்கு நீ ஆபீஸ்போக வேண்டாம் சுஜா என்றான் யுவன். கஷாயம் வைத்து கொடுத்தான். அவசியம் போயே