சுஜா பெங்களூர் போவதற்கு இன்னும் மூன்று வாரங்கள் இருந்தன. அவ்வப்போது வேண்டிய பொருட்களை ஷாப்பிங் செய்து வந்தாள் . யுவனும் அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தான். திடீரென அவனுக்கு அந்த யோசனை தோன்றியது. ஏன் சுஜா நாம் தீபனை ஒரு லஞ்ச்க்கு invite பண்ணக்கூடாது என்றான். அதற்கென்ன கூப்பிட்டால் போச்சு என்றாள் . என்ன தீடீர்னு? நமக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணியிருக்காரு அதுதான் என்றான் யுவன். சரி வர சண்டே வர சொல்லுவோமா சரி . நீயே ஃபோன் பண்ணி கூப்பிடு அதுதான் சரியாக இருக்கும் என்றாள் சுஜா. சரி. தீபன் ஆச்சர்யத்தில் உறைந்து போனான். வருவதாக ஒப்புக்கொண்டான். அன்று எங்கேயும் போய் விடாதீர்கள் என்று யுவனை கேட்டுக்கொண்டாள். தீபனை அலுவலகத்தில் சந்தித்த போதும் அவள் அவனிடம் அவனுடைய வருகையை உறுதிபடுத்திக்கொண்டாள் . வீணாவிடம் சொல்லிய போது இது நல்ல விஷயம் என்றாள். தீபன் சரி என்று சொல்லிவிட்டானே தவிர