இரவு 11 மணி ஆகிவிட்டது சுஜா வீட்டை அடைய. யுவன் சுஜாவுக்காக ஏதோ சமைத்திருந்தான். எனக்கு பசிக்கல யுவன் கொஞ்சம் பால் இருந்தா சுட வைத்து குடுங்க என்றாள். என்னாச்சு சுஜா மீட்டிங் எப்படி போச்சு என்றான். மீட்டிங் நல்லாத்தான் போச்சு ஆனா அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தான் . சாரி யுவன் எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு காலைல பேசிக்கலாம் என்றாள் . அவன் மடியிலே படுத்தவாறு தூங்கி போனாள்.யுவன் அன்று சீக்கிரமே எழுந்து விட்டான்.சுஜா எழுந்திருக்க சற்று லேட் ஆகிவிட்டது. என்னை எழுப்பி இருக்கலாமே என்றாள் . நைட் நீயே ஏதோ டென்ஷன் ஆ இருந்தே அதான் கொஞ்ச நேரம் தூங்கட்டும் அப்படின்னு விட்டுட்டேன். லவ் யு யுவன் என்று அவனை அணைத்துக்கொண்டாள் . இன்னைக்கு ஆபீஸ் போகலையா மதியம் போல போறேன். இப்போ குளிக்க போறேன் என்றாள் . சுஜா மனதில் அலையலையாய் தீபன் பற்றிய சித்திரங்கள்