யாதுமற்ற பெருவெளி - 7

  • 1.1k
  • 513

ஹாய் சுஜா என்னை இங்கு எதிர்பார்க்கவில்லை தானே என்பதற்குள் வீணாவே சொன்னாள் . லாஸ்ட் மினிட் ல தான் எனக்கே தெரியும் தீபன் அவரோட ஃப்ரெண்ட் அப்படின்னு. எங்கே அவர் என்றாள் சுஜா. கார் பார்க் பண்ண போயிருக்கான் சதீஷ் என்றான் தீபன் . ஹாய் வீணா என்றவாறு வந்து சேர்ந்தான் சதீஷ். சுஜாவை சதீஷுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் வீணா.அவங்க தனியா பேசட்டும் என்றவாறு சுஜாவும்,தீபனும் வேறொரு டேபிள் ஒன்றில் அமர்ந்தார்கள்.என்ன சுஜா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க .அதெல்லாம் ஒண்ணுமில்லை. எங்கே யுவன் . அவரு வெளியூர் போயிருக்காரு என்றாள். ம் நான் வந்ததுல உங்களுக்கு ஏதும் வருத்தம் இல்லையே ,சே சே நீங்க சதீஷ் ஃப்ரெண்ட் ஆ இருப்பீங்க அப்படின்னு எதிர்பார்க்கல அதுல எனக்கு சந்தோஷம்தான்.வீணாவிற்கு சதீஷை பிடித்து விட்டது.சதீஷூக்கும் வீணாவை பிடித்து விட்டது. எல்லோரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டார்கள். நான் சுஜாவை டிராப் பண்ணிவிடுகிறேன் என்றான்