யாதுமற்ற பெருவெளி - 6

  • 75

சுஜாவின் கதை இறக்கைகள் படபடக்க அந்த புறா அறையை விட்டு பறந்தது. நெடுநாள் ஆயிற்று அவன் அந்த அறைக்கு வந்து. எப்படியோ அந்த புறா அங்கு கூடு கட்டியிருந்தது. எத்தனையோ நாட்கள் ஆயிற்று அவன் எழுதி.சுஜாவை கூப்பிட்டு அறையை சுத்தப்படுத்த சொல்லவேண்டும். சுஜா பாவம் அவள்தான் எவ்வளவு வேலைகளை செய்வாள். இவனே அங்கிருந்த விளக்குமாறு எடுத்து அறையை சுத்தம் செய்தான். இவனுக்கும் சுஜாவுக்கும் கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. சுஜா வேலைக்கு போய்வருவதால் கவலை இல்லை. இவன் எழுத்து வேலையாய் இருந்தான். யுவனுக்கு காப்பி குடித்தால் தேவலை போல இருந்தது. சுஜா அன்று வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்த போது இவன் தூங்கி கொண்டிருந்தான். சுஜா மெசேஜ் பண்ணியிருந்தாள்.டிபன் சாப்பிட்டாயா என்று கேட்டிருந்தாள் . அவளுக்குத்தான் எத்தனை பிரியம். தன்னுடைய பொறுப்பற்ற தன்மையை அவள் எவ்வளவு தூரம் சகித்து கொள்கிறாள்.பெற்றோர் இல்லாத பையனான யுவனுக்கு அவனுடைய மாமா தான் சுஜாவை