ஒரு நிமிடம் திகைத்தவன் என்ன சாம் இப்போ வந்து இப்படி கேக்குற என்றான். ம் நீ என்னை விட்டு விலகாம இருந்தா போதும் அப்படின்னு நினைத்தேன் ஆனா எங்கே உன்னை விட்டு நிரந்தரமா பிரிஞ்சுடுவேனோ அப்படின்னு எனக்கே பயமாயிடுச்சு .. ஹேய் நான் நீ நல்லா படிச்சு வெளிநாடு போய் செட்டில் ஆகிற வரை உன்னை விட்டு எங்கும் போகமாட்டேன். இது என்னோட பிராமிஸ் என்றான். தாங்க்ஸ் தீபன் என்றாள். வா சாப்பிடலாம் என்றான். நீ போ நான் வருகிறேன் .. தீபன் அவளை நினைத்து கவலைப்பட்டாலும் அப்போதைக்கு வெளியே காட்டிக்கொள்ள வில்லை. மாறாக இனி பிரவீனுடன் எந்த வித விரோத போக்கையும் கொள்வதில்லை என முடிவு எடுத்தான். ரொம்ப தாங்க்ஸ் கதிர் நீ இல்லேன்னா இந்த ஃபங்சன் இவ்ளோ சிறப்பா நடந்து இருக்காது என்றான் பிரவீன். அதுக்காக இங்கேயே டேரா போடலாம்னு நினைக்காதே.. அவளும் நானும் ஹஸ்பண்ட் அண்ட் வொய்ஃப்