உன் முத்தத்தில் உறையும் நெஞ்சம் - 2

  • 60

ருத்ரன் சிவன்யா ரொம்பவே அழகான காதல் பொருத்தம் உள்ள பெயர்கள்.. ஆனால் நம் கதையில் நடக்கும் காதல் வெறும் கனவு இல்லையே!!!  அது போராட்டமும் தீவிரமும் நிறைந்தது . சிவன்யாவை பழிவாங்கும் வெறியில் தவறான வழியில் திருமணம் செய்து கொள்கிறான் நம் கதாநாயகன் ருத்ரன்..ஆனால் அவன் சிவன்யாவை அளவுக்கு அதிகமாக வெறுப்பவன்..      அதேபோல் பிடிக்காத திருமண பந்தத்தில் சிக்கிய சிவன்யா தன் கணவனிடம் தினமும் போராடி தவிக்கிறாள்.. அந்தப் போராட்டம் இறுதியில் இருவருக்குள்ளும் காதலை மலர வைத்ததா?  அல்லது அவர்களது திருமண பந்தத்தில் இருந்து அவர்களை பிரிய வைத்ததா?   மும்பையில் மிகப்பெரிய பிரபலமான கல்யாண மண்டபம். அந்த மண்டபத்தில் திருமண பெண்ணாக சிவன்யா.. தலை முதல் கால் வரை வைர நகைகளாலேயே அலங்கரித்து இருந்தார்கள்.. அவளால் அதை நம்பவே முடியவில்லை. சென்னையில் எங்கோ ஒரு மூலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவளுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று வீட்டில்