அத்தியாயம் -1 மும்பையில் மிகப்பெரிய பிரபலமான கல்யாண மண்டபம். அந்த மண்டபத்தில் திருமண பெண்ணாக சிவன்யா.. தலை முதல் கால் வரை வைர நகைகளாலேயே அலங்கரித்து இருந்தார்கள்.. அவளால் அதை நம்பவே முடியவில்லை. சென்னையில் எங்கோ ஒரு மூலையில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவளுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று வீட்டில் யாருமே எதிர் பார்க்கவில்லை... இன்னும் அரை மணி நேரத்தில் அவளுக்கு திருமணம்.. அவளாலும் நடக்கப்போவதை கற்பனை கூட செய்ய முடியவில்லை. சில நேரங்களில் கனவோ என்று கூட நினைத்தாள்.. மும்பையில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் ருத்ரன்..அவன் தான் இன்னும் சிறிது நேரத்தில் தனக்கு கணவனாக போகிறான். அதை நினைத்து அவளுக்கு சந்தோஷப்படுவதா பயப்படுவதா என்றே தெரியவில்லை.. ஏனென்றால் அவளுக்கு இங்கு ஏதோ புரியாத புதிர் இருப்பது போல் ஒரு உள் உணர்வு சொன்னது.. தான் இந்த விஷயத்தில் சந்தோஷமாக இருக்கிறோமோ இல்லையோ தன் குடும்பத்தில் இருக்கும் அப்பா, அம்மா, தம்பி தங்கை, அண்ணன் அத்தனை பேரும் இவளது